Paristamil Navigation Paristamil advert login

சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ராணுவ விமானம்..

சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ராணுவ விமானம்..

25 தை 2024 வியாழன் 09:50 | பார்வைகள் : 1320


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா பாரிய தாக்குதலை தொடங்கியதில் இருந்து போர் தீவிரமடைந்து வருகின்றது.

ரஷ்யாவின் ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று பெல்கோரோட்  பகுதியில் உக்ரைனிய படையால் வீழ்த்தப்பட்டு இருப்பது உக்ரைன்-ரஷ்யா இடையிலான ராணுவ நடவடிக்கையில் பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளது.

ரஷ்யாவின் உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் நாட்டின் தெற்கில் உள்ள பெல்கோரோட் (Belgorod) பகுதியின் யப்லோனோவோ(Yablonovo) நகரில் ரஷ்ய ராணுவத்தின் போக்குவரத்து விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான இலியுஷின்-76(Ilyushin-76) விமானத்தில் சென்றவர்கள் அல்லது கொண்டு செல்லப்பட்டவை குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகவில்லை.

ஆனால் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய தகவலின், Ilyushin-76 விமானத்தில் 65 பிணைக்கைதிகள் மற்றும் 9 மற்ற உறுப்பினர்கள் விமானத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

கீவ் போஸ்ட் தகவலின்படி, உக்ரைனிய ஜெனரல் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் வீழ்த்தப்பட்ட விமானத்தில் வான் பாதுகாப்பு அமைப்புகளில் பயன்படுத்த ஏவுகணைகளை ரஷ்யா கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் ரஷ்யாவின் ராணுவ போக்குவரத்து விமானமான Ilyushin-76ஐ உக்ரைன் தான் சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்யா நேரடியாக டெலிகிராமில் குற்றம்சாட்டியுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்