Paristamil Navigation Paristamil advert login

விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு ஜனாதிபதி விஜயம்

விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு ஜனாதிபதி விஜயம்

25 தை 2024 வியாழன் 10:14 | பார்வைகள் : 5864


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (25) கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு விஜயம் செய்தார்.

இன்று(25) அதிகாலை கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் உயிரிழந்தனர்.

இதேவேளை, உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைகள் ஆராய்ச்சி கட்டுவையில் உள்ள அவரது காரியாலயத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் சடலம் இன்று மாலை 5.30 மணியளவில் தனியார் மலர்சாலையில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை 26 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்