நடுவானில் கழன்று விழுந்த விமான சக்கரம் - அதிர்ச்சியில் பயணிகள்
25 தை 2024 வியாழன் 11:34 | பார்வைகள் : 1919
அமெரிக்காவில் புறப்பட தயாராக இருந்த போயிங் 757 ரக விமானத்தின் டயர் திடீரென கழன்று விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோர்ஜியா மாகாண தலைநகர் அட்லாண்டாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 'டெல்டா' விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான குறித்த விமானம், கொலம்பியாவின் பகோடா நகருக்கு புறப்பட தயாராக இருந்தது.
இந்த விமானத்தில் 184 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கட்டுப்பாட்டு அறையின் சமிக்ஞைக்காக விமானிகள் காத்திருந்த போது விமானத்தின் முன்பக்க டயர்களில் ஒன்று திடீரென கழன்று விழுந்தது.
இதனால் அந்த விமானம் அதிர்ந்தது. விமானத்தின் முன்பக்க டயர் கழன்றதை உணர்ந்த விமானிகள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விமானத்தில் இருந்த பயணிகளை விமான ஊழியர்கள் பத்திரமாக மீட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.