நவாஸ் ஷெரீப் பேரணியில் சிங்கம் மற்றும் புலியுடன் தொண்டர்கள்
25 தை 2024 வியாழன் 12:34 | பார்வைகள் : 2308
பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிடுவதற்காக வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார்.
அவரின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது தேர்தல் பிரசாரம் தீவிரமான நடைபெற்று வருகிறது.
நவாஸ் ஷெரீப் தேசிய தேர்தலுக்கான 130-வது தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அக்கட்சியின் சின்னத்தை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் சிங்கம் மற்றும் புலியுடன் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் நிஜ சிங்கம், புலி என்பவற்றை கொண்டு வந்துள்ளனர்.
கூண்டில் அடைத்தவாறு கொண்டு வந்திருந்தனர். இதைப்பார்த்து மற்ற தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்த போதிலும், மறுபக்கம் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்ததால் அவற்றுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
நிஜ சிங்கம், புலியுடன் பேரணியில் கலந்து கொண்டது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மரியும் அவுரங்ஜப், நவாஸ் ஷெரீப்பின் வலியுறுத்தலின்படி அந்த சிங்கம், புலி திருப்பி கொண்டு செல்லப்பட்டன.
பாகிஸ்தானில் உயிருள்ள சிங்கம் மற்றும் மற்ற விலங்கினங்களை பேரணிக்கு கொண்டு வரக்கூடாது என நாவஸ் ஷெரீப் கண்டிப்புடன் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.