வெளிநாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி
25 தை 2024 வியாழன் 12:51 | பார்வைகள் : 12249
கட்டாருக்கு தொழில் நிமித்தம் சென்று 26 ஆவது நாளில் வாகன விபத்தொன்றில் சிக்கி, யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் டிபில்ஸ்குமார் துவிகரன் என்ற 24 வயதான ஒரு பெண்பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், வடமராட்சி, அல்வாய், மனோகரா பகுதியைச் சேர்ந்த இவர் நவகிரியை சொந்த இடமாக கொண்டவர்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்டு அல்வாயில் வசித்து வந்தார்.
இவர் தொழிலுக்காக கட்டார் சென்று 26 நாட்களேயான நிலையில், அந்நாட்டில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் அவரது ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நேற்று (24) இறுதிக்கிரியைகளை தொடர்ந்து தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

























Bons Plans
Annuaire
Scan