◉ நாளை பரிசை முடக்க திட்டமிட்டுள்ள விவசாயிகள்!

25 தை 2024 வியாழன் 13:46 | பார்வைகள் : 9084
நாளை ஜனவரி 26 ஆம் திகதி, தலைநகர் பரிசில் இருந்து வெளியேறும் அனைத்து வீதிகளையும் முடக்குவதற்கு விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ள விவசாயிகள் போராட்டம் இன்று ஐந்தாவது நாளின் பின்னர் இல் து பிரான்சை நெருங்கியிருந்தது. இந்நிலையில் பரிசிலும் இந்த போராட்டங்கள் நாளை இடம்பெற உள்ளதாக விவசாயிகள் சம்மேளனம் (FDSEA ) அறிவித்துள்ளது.
தங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என தெரிவிக்கும் விவசாயிகள், பரிசின் வீதிகளை முடக்குவதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என தெரிவித்துள்ளனர்.
வீதிகளில் உழவு இயந்திரங்களை நிறுத்தி, வீதிகளை ஸ்தம்பிக்க வைக்கும் இந்த போராட்டத்தினால் கடந்த சில நாட்களாக பல்வேறு நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025