சென்ற ஆண்டு 17,000 பேருக்கு வதிவிட விசா நிராகரிப்பு!!

25 தை 2024 வியாழன் 14:35 | பார்வைகள் : 10969
சென்ற 2023 ஆம் ஆண்டில் பிரான்சில் வதிவிட தஞ்சம் கோரியவர்களில் 17,000 பேருக்கு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த அனுமதி மறுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10.7% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. 17,000 பேரின் தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 10,800 பேர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சென்ற ஆண்டில் தஞ்ச கோரிக்கை விண்ணப்பங்களும் அதிகரித்துள்ளன. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டில் 7.5% சதவீதத்தால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Russia, Guinea, Côte d'Ivoire, Congo மற்றும் Sudan போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளே அதிகளவு தஞ்ச கோரிக்கைகளை கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1