30,000 இந்திய மாணவர்களை வரவேற்க தயாராகும் பிரான்ஸ்!
26 தை 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 4958
பிரான்சில் மேற்படிப்புக்காக 30,000 இந்திய மாணவர்களை வரவேற்க பிரான்ஸ் தயாராகியுள்ளது.
இந்தியாவின் குடியரசு நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியா பயணித்துள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அங்கு வைத்தே இதனைக் குறிப்பிட்டார். ‘பிரான்சில் qs ranking சான்றிதழ் அளிக்கப்பட்ட 35 பல்கலைக்கழங்கள் உள்ளன. நாம் அனைத்து சர்வதேச வகுப்புகளையும் கொண்டுள்ளோம். இந்திய மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் பிரெஞ்சு தெரிந்திருக்கவேண்டியது எனும் அவசியம் இல்லை. 2030 ஆம் ஆண்டுக்குள் 30,000 இந்திய மாணவர்களை பிரான்ஸ் வரவேற்கும்’ என ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
’இது மிகவும் போராட்டமான இலக்காகும். ஆனால் நான் அதை அடையும் முடிவுடன் இருக்கிறேன்!” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி தகவல்களை தனது X சமூகவலைத்தளத்தில் ஆங்கில மொழியில் பகிர்ந்துள்ளார்.