Paristamil Navigation Paristamil advert login

Essonne : ஆட்கடத்தலில் ஈடுபட்ட - பாக்கிஸ்தானைச் சேர்ந்த இருவருக்கு சிறை!!

Essonne : ஆட்கடத்தலில் ஈடுபட்ட - பாக்கிஸ்தானைச் சேர்ந்த இருவருக்கு சிறை!!

26 தை 2024 வெள்ளி 08:00 | பார்வைகள் : 7244


ஆட்கடத்தலில் ஈடுபட்ட பாக்கிஸ்தானைச் சேர்ந்த இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் Grigny (Essonne) நகரில் 13 அகதிகளை கனரக வாகனம் ஒன்றுக்குள் வைத்து பூட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் கடத்திச் சென்ற நிலையில், காவல்துறையினரால் அவகள் அனைவரும் மீட்கப்பட்டிருந்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட இரு பாக்கிஸ்தானியர்களை காவல்துறையினர் கைது செய்து விளக்கமறியலில் வைத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று ஜனவரி 25 ஆம் திகதி வியாழக்கிழமை, 22 மற்றும் 25 வயதுடைய இருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருக்கு இரண்டு ஆண்டுகளும் ஒருவருக்கு மூன்று ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து Evry நகர குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடத்திச் செல்லப்பட்ட 13 அகதிகளும் இந்தியர்கள் மற்றும் பாக்கிஸ்தானியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்