Paristamil Navigation Paristamil advert login

17 மொழிகளில் மொழிபெயர்க்கக்கூடிய கருவியுடன் RATP ஊழியர்கள்!

17 மொழிகளில் மொழிபெயர்க்கக்கூடிய கருவியுடன் RATP ஊழியர்கள்!

26 தை 2024 வெள்ளி 09:00 | பார்வைகள் : 5465


தொடருந்து நிலையங்களில் பயணிக்கும் பிரெஞ்சு மொழி தெரியாத வெளிநாட்டவர்கள், இனிமேல் RATP ஊழியர் ஒருவரை தொடர்புகொண்டு அவரிடம் இருந்து 17 மொழிகளில் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

RATP ஊழியரின் கைகளில் இருக்கும் சிறிய கருவி, இந்தி, சீனா மொழிகளும், ஐரோப்பாவில் புழக்கத்தில் இருக்கும் மொழிகளும் என மொத்தம் 17 மொழிகளில் மொழி பெயர்க்கும். டச்சு மொழியில் பயணி ஒருவர் கேட்கும் கேள்வியினை, உடனடியாக பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்க, ஊழியர் அதற்கு பிரெஞ்சு மொழியிலேயே பதிலளிக்க, அதனை உள்வாங்கும் குறித்த கருவி மீண்டும் டச்சு மொழியில் அதனை குறித்த பயணிக்கு தெரிவிக்கும்.

இந்த வசதி தற்போது இல் து பிரான்ஸ் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பரீட்சாத்த முயற்சியில் இருந்த வசதி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காக 2 மில்லியன் யூரோக்களை RATP நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளின் போது பல மில்லியன் மக்கள் பரிசுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த வசதி பெரிதும் கைகொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்