Paristamil Navigation Paristamil advert login

பவதாரிணியின் பூதவுடலை எடுத்துச் செல்ல இலங்கை வந்த யுவன்...

பவதாரிணியின்  பூதவுடலை   எடுத்துச் செல்ல இலங்கை வந்த யுவன்...

26 தை 2024 வெள்ளி 07:47 | பார்வைகள் : 2538


இசையமைப்பாளர் இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணி கேன்சர் நோயால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரண்டு மகன்கள் உள்ளனர். பவதாரிணி என்ற ஒரு மகளும் இருந்தார். மகன்கள் இருவரையும் போலவே பவதாரிணியும் இசை அமைப்பாளராகவும், பின்னணி படகியாகவும் இருந்து வந்தார். இந்நிலையில், சபரீசன் என்ற தொழிலதிபரை மணந்து கொண்ட பவதாரிணிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பவதாரிணி சிகிச்சை பெற்று வந்தார். 

சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து கல்லீரலில் கல் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பவதாரிணியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து ஆயுர்வேத சிகிச்சை அளிக்க இலங்கை அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு கொண்டு செல்லப்பட்ட சில நாட்களிலேயே அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பதும், அதுவும் 4வது கட்டத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

இன்றைய தினம் அவரின் பூதவுடல் சென்னைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.இதேவேளை, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர், நேற்றிரவு இலங்கை வந்துள்ளதுடன், அவரின் உடலை பொறுப்பேற்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவும் இந்தியா நோக்கி இன்றைய தினம் புறப்படவுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்