ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதை பெற்ற இலங்கை கேப்டன்...
26 தை 2024 வெள்ளி 08:10 | பார்வைகள் : 1972
2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் போட்டியின் சிறந்த வீராங்கனை விருதை இலங்கையின் கேப்டன் சமரி அதப்பத்து வென்றார்.
ஐசிசி 2023ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் விருதுகளை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனை, அணி என பல பிரிவுகளில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடவர் கிரிக்கெட்டில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை விராட் கோலியும் (இந்தியா), சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை உஸ்மான் கவாஜாவும் (அவுஸ்திரேலியா) வென்றுள்ளனர்.
சிறந்த வளர்ந்து வரும் வீரராக ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) அறிவிக்கப்பட்டுள்ளார். சிறந்த நடுவர் விருதை ரிச்சர்டு இல்லிங்வொர்த் (இங்கிலாந்து) வென்றுள்ளார்.
சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தெரிவாகியுள்ளார். சிறந்த ஆடவர் இணை கிரிக்கெட் வீரர் விருதுக்கு பஸ் டி லீடே (நெதர்லாந்து) தெரிவாகியுள்ளார்.
அதேபோல் மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை, இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சமரி அதப்பத்து சிறந்த ODI கிரிக்கெட் வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் Phobe :Litchfield-வும், சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனையாக ஹேலே மேத்யூஸும் (வெஸ்ட் இண்டீஸ்) தெரிவாகியுள்ளனர்.