Paristamil Navigation Paristamil advert login

காசா யுத்தம்  - இஸ்ரேல் இராணுவத்தின் மீது  சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு..?

காசா யுத்தம்  - இஸ்ரேல் இராணுவத்தின் மீது  சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு..?

26 தை 2024 வெள்ளி 08:31 | பார்வைகள் : 1696


காசாவில் இஸ்ரேல் யுத்த குற்றங்களில் ஈடுபடுவதாக தெரிவித்து தென்ஆபிரிக்கா தாக்கல் செய்துள்ள மனு மீதான தனது தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது.

காசாவில் இஸ்ரேல் இராணுவநடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என ஐக்கியநாடுகளின் நீதிமன்றம் உத்தரவிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்கா தாக்கல் செய்த மனுதொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வேளை இரண்டு தரப்பினரும் தமது தரப்பு வாதங்களை முன்வைத்திருந்தனர்.

சர்வதேசநீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியம்  இல்லை என்ற போதிலும் இந்த தீர்ப்பு அரசியல்முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படலாம்.

பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவாக குரல்கொடுத்துவரும் தென்னாபிரிக்கா இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கைகளை இடைநிறுத்தவேண்டும் என்பது உட்பட 9 இடைக்கால உத்தரவுகளை நீதிமன்றம்பிறப்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டிற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்