Paristamil Navigation Paristamil advert login

உலகிலேயே முதன்முறையாக பிரேசிலில் மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி

உலகிலேயே முதன்முறையாக பிரேசிலில் மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி

26 தை 2024 வெள்ளி 08:55 | பார்வைகள் : 1230


உலகிலேயே முதன்முறையாக, தென் அமெரிக்க நாடான பிரேசிலில், நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

ஏ.டி.எஸ். கொசுக்களால் பரவும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சமீபகாலமாக பிரேசில் நாட்டில் அதிகரித்து வருகிறது. 

அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது. 

இதனால், தொடர் காய்ச்சல். ஏற்பட்டதால், அந்நாட்டு மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இதனையடுத்து, மக்களை காக்க பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மக்களுக்கும் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. 

அதைதொடர்ந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு போடப்பட்டு உள்ளது. 

இதனால், உலக அளவில் அதிகமான டெங்கு தடுப்பூசி போடப்பட்ட நாடாக பிரேசில் கருதப்படுகிறது. 

இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் ( WHO)தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்