Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் No.1 வீரரை மிரள வைத்த சின்னர்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் No.1 வீரரை மிரள வைத்த சின்னர்

26 தை 2024 வெள்ளி 11:07 | பார்வைகள் : 3530


அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதி போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சின்னர் முன்னேறினார்.

ஆண்டின் முதல் 'Grand Slam' போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டியானது வரும் 28 -ம் திகதி வரை நடைபெற இருக்கிறது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் தரவரிசையில் நம்பர் 1 வீரரான Novak Djokovic (செர்பியா), Jannik Sinner (இத்தாலி) உடன் மோதினார்.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே Novak Djokovic-க்கு Jannik Sinner நெருக்கடி கொடுத்து வந்தார். அப்போது, முதல் 2 செட்டுகளை எளிதில் கைப்பற்றிய சின்னர், 3- வது செட்டில் டை பிரேக்கர் வரை போராடி இழந்தார்.

இருப்பினும், 4 -வது செட்டில் அதனை கைப்பற்றி வெற்றியடைந்தார். அதன்படி, 6-1, 6-2, 6-7 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் Novak Djokovic -யை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு Sinner முன்னேறினார்.     

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்