Paristamil Navigation Paristamil advert login

எதிர்வரும் 01/01/2024 முதல் 'Crit'Air 4' வாகனங்களுக்கு நகரங்களுக்குள் பயணிக்க தடை. மீறினால் அபராதம்.

எதிர்வரும் 01/01/2024 முதல் 'Crit'Air 4' வாகனங்களுக்கு நகரங்களுக்குள் பயணிக்க தடை. மீறினால் அபராதம்.

28 மார்கழி 2023 வியாழன் 09:38 | பார்வைகள் : 6184


பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் 40 000 இறப்புகள் காற்று மாசடைதலால் நிகழ்கிறது. இந்த இறப்புக்களை தடுக்க அல்லது குறைந்தபட்சம் குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வரிசையில் அதிக மாசடைதலை ஏற்படுத்தும் வாகனங்களின் பாவனையைக் குறைக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக 'Crit'Air 4' ஒட்டிகளைக் கொண்ட வாகனங்களை நகரங்களுக்குள் பயணிக்கும் தடை வரும் ஜனவரி 1ம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

இதன் முதல் கட்டமாக Échirolles, Eybens, Fontaine, Gières, Grenoble, La Tronche, Le Pont-de-Claix, Meylan, Saint- Égrève, Saint-Martin-d'Hères, Saint-Martin-le-Vinoux, Seyssinet-Pariset மற்றும் Seyssins என்னும் பதினொரு நகரங்களுக்குள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிரான்சின் பல நகரங்களும் குறித்த தடையை கொண்டுவர உத்தேசித்துள்ளன என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அமலில் இருக்கும், ஆனால் கோரிக்கையின் பேரில் விதிவிலக்குகள் சாத்தியமாகும், "உதாரணமாக தவறுதலாக உள்ளே நுழைதல், வேலை செய்பவர்கள், சிறிய தூரத்துக்கு செல்பவர்கள் மன்னிப்பு அழிக்கப்படுவார்கள். முதல் ஆறு மாதத்திற்கு மன்னிப்புக்கள் வழங்கப்படும். இந்த காலத்திற்கு பின்னர் அபராதம் விதிக்கப்படும். இலகுரக பயன்பாட்டு வாகனத்திற்கு 68€ யூரோக்கள், கனரக வாகனங்களுக்கு 135€ யூரோக்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்