Paristamil Navigation Paristamil advert login

Val-d'Oise : யோகட் சாப்பிட்ட திருடன்! - மரபணு சோதனையில் சிக்கிய சோகம்!

Val-d'Oise : யோகட் சாப்பிட்ட திருடன்! - மரபணு சோதனையில் சிக்கிய சோகம்!

28 மார்கழி 2023 வியாழன் 13:05 | பார்வைகள் : 6052


வீடொன்றுக்குள் நுழைந்து கொள்ளையிட்ட திருடன் ஒருவர், அங்கிருந்த யோகட் ஒன்றை சாப்பிட்டதால் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.

Argenteuil (Val-d'Oise) நகரில் இச்சம்பவம் கிறிஸ்மஸ் தினத்துக்கு சில நாட்கள் முன்பு இடம்பெற்றது. rue Ernestine வீதியில் உள்ள ஆளில்லா வீடொன்றினை உடைத்து உள்நுழைந்த திருடன் ஒருவர், அங்கிருந்த வில விலையுயர்ந்த பொருட்களையும், நகைகளையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். 

பின்னர் உரிமையாளர் வீட்டினை வந்தடைந்தபோது, வீடு கொள்ளையிடப்பட்டதை அறிந்து, காவல்துறையினரை அழைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், வீட்டினை கொள்ளையிட்ட திருடன், குளிர்சாதனப்பெட்டியில் இருந்து யோகட் ஒன்றை எடுத்து  சாப்பிட்டிருப்பதை அறிந்து, மரபணு (DNA) மாதிரிகளை சோதனையிட்டனர்.

அதையடுத்து, மரபணு முடிவுகளின் படி திருடன் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் காவல்துறையினரால் முன்னதாகவே அறியப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்