Paristamil Navigation Paristamil advert login

யாழில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அழைப்பு

யாழில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்:  பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அழைப்பு

29 மார்கழி 2023 வெள்ளி 02:30 | பார்வைகள் : 1208


யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தீவிரமைடைந்துள்ள நிலைமையை கட்டுப்படுத்த அயல் மாவட்டங்களிலிருந்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் டெங்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

“டெங்குவை ஏற்படுத்தும் நுளம்புகள் வீரியம் மிக்க நுளம்புகளாக உள்ளதாக பூச்சியியல் ஆய்வ சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகளவான நோயாளர்கள் இருப்பதால் அதனை சூழவுள்ள பகுதிகளிலுள்ளவர்கள் அதிகளவாக அக்கறையுடன் இருக்க வேண்டும்.

நோய் நிலைமையை கட்டுப்படுத்த மேலததிகமாக அயல் மாவட்டங்களிலிருந்தும் சுகாதாரப் பரிசோதகர்களை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தற்போது பரவியுள்ள டெங்கு தொற்றானது மூன்றாவது வகை நுளம்பின் மூலமே பரவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 150 பேர் நாளாந்தம் டெங்கு சிகிச்சைக்காக வருகின்ற நிலையில் நேற்று 84 பேர் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இம்மாதம் 1,284 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக” அவர் குறிப்பிட்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்