சட்டவிரோத தங்க அகழ்வு - பிரெஞ்சு கியானாவுக்கு பயணமாகும் பிரதமர்!
29 மார்கழி 2023 வெள்ளி 07:00 | பார்வைகள் : 2904
பிரான்சின் கடல்கடந்த மாவட்டமான Guyane இற்கு பிரதமர் Élisabeth Borne பயணிக்க உள்ளார். அங்கு சட்டவிரோதமாக தங்கம் தோண்டுபவர்களை கண்காணிக்கும் இராணுவ படையினரைச் சந்திக்க உள்ளார்.
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் Élisabeth Borne அங்கு பயணிக்க உள்ளார். அன்றைய புதுவருட இரவை அங்கு கழித்துவிட்டு, மறுநாள் திங்கட்கிழமை அவர் Dorlin நகருக்கு பயணமாகிறார். அங்கு இராணுவ வீரர்களைச் சந்திக்கிறார்.
கடல் கடந்த மாவட்டங்களுக்கு பிரதமர் மேற்கொள்ளும் மூன்றாவது அரச பயணம் இதுவாகும். முன்னதாக கடந்த மே மாதத்தில் Reunion தீவுக்கும், இம்மாத ஆரம்பத்தில் Mayotte தீவுக்கும் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.