Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ஜாம்பவானின்  சாதனையை  வீழ்த்திய விராட் கோலி!

இலங்கை ஜாம்பவானின்  சாதனையை  வீழ்த்திய விராட் கோலி!

29 மார்கழி 2023 வெள்ளி 06:49 | பார்வைகள் : 1236


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணி வீரர் விராட் கோலி 7 முறை ஒரே ஆண்டில் 2000 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

செஞ்சூரியனில் நடந்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விராட் கோலி இரண்டாம் இன்னிங்சில் 76 (82) ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அவர் ஒரே ஆண்டில் 7 முறை 2,000 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார். 

இதற்கு முன்பு இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா 6 முறை ஒரே ஆண்டில் 2,000 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 

அவரது இந்த இமாலய சாதனையை கோலி முறியடித்துள்ளார். மேலும், கோலி அடித்த 30வது டெஸ்ட் அரைசதம் ஆகும். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்