பிரான்சில் (huîtres) எனும் மட்டிகளை அறுவடை செய்யவும், விற்கவும் தடை.
29 மார்கழி 2023 வெள்ளி 07:54 | பார்வைகள் : 4481
பிரான்ஸ் நாட்டவர்கள் கிறிஸ்துமஸ், புதுவருட நாட்களில் அதிகம் விரும்பி உண்ணும் 'huitres' எனும் கடலுணவில் பாக்டீரியா தாக்கம் இருப்பதாக அறியப்பட்டதை அடுத்து Arcachon மற்றும் Banc d'Arguin கடல் படுக்கைகளில் இருந்து மீன், 'huitres' எனும் மட்டிகளை பிடிப்பதும், அறுவடை செய்வதும் தடைவிதிக்கப் பட்டுள்ளது.
தடை குறித்து கருத்து தெரிவித்த Arcachon-Aquitaine பிராந்திய மட்டி வளர்ப்புக் குழுவின் தலைவர் Olivier Laban.
"பல மாதங்களாக நாங்கள் உழைத்த உழைப்பு பாழாகி போகிறது, 7 முதல் 9 மில்லியன் யூரோக்களை இழக்கிறோம், 800 முதல் 1000 டன் எடையுள்ள 'huitres' எனும் மட்டிகள் கடல் படுக்கையில் கிடக்கிறது, இதனால் 'huitres' எனும் மட்டிகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்கிறார்.
28 நாட்கள் கடலுக்கு சென்ற 'huitres' எனும் மட்டிகளை அறுவடை செய்யவோ, விற்பனை செய்யவோ, முடியாதபடி பிராந்திய காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால் அதிக சேதம் ஏற்படும் என மட்டி வளர்ப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.