Paristamil Navigation Paristamil advert login

"நீங்கள் யாருடன் 'boire une bière' பீர் குடிக்க விரும்புகிறீர்கள்?" ஒரு நூதனமான கணக்கெடுப்பு.

29 மார்கழி 2023 வெள்ளி 07:55 | பார்வைகள் : 3732


இந்த கணக்கெடுப்பு முறை அமெரிக்காவில் தோன்றியது. பின்னர் 2017 முதல் பிரான்சுக்கு இறக்குமதியானது. இந்த கணக்கெடுப்பை Coriolink க்கான Ifop நடத்தியது, Le Figaro பத்திரிகை இன்று வெளியிட்டுள்ளது.

பிரான்சின் அரசியல் தலைவர்களில் யாருடன் நீங்கள் 'boire une bière' பீர் குடிக்க விரும்புகிறீர்கள் எனும் கேள்வியே இந்த கணக்கெடுப்பு. 

இதில் முன்னாள் பிரதமர்  Edouard Philippe. 37 % வீதத்தில் முன்னிலையில் உள்ளார், அடுத்து Marine Le Pen 35% சதவீதத்தில் இரண்டாம் இடத்திலும், கல்வி அமைச்சர் Gabriel Attal 34% சதவீதத்தில் மூன்றாம் இடத்திலும் உள்ளார். பிரான்ஸ் அரசு தலைவர் Emmanuel Macron 28% சதவீதத்தில் நான்காம் இடத்தில் உள்ளார், 
 
முதல் நான்கு இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஏறத்தாழ வலதுசாரிகள். அடுத்து இடதுசாரிகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் Fabien Roussel 25% சதவீதத்தில் ஐந்தாம் இடத்திலும், François Ruffin 22% வீதத்தில் ஆறாம் இடத்தில் இருக்கிறார்கள். மிகத் தூரத்தில் La France Insoumise கட்சியின் தலைவர் Jean-Luc Mélenchon 15% சதவீதத்தில் ஏழாம் இடத்தில் இருக்க parti socialiste கட்சியின் தலைவர் Olivier Faure 14% சதவீதத்தையும், சுற்றுச்சூழல் l’écolo கட்சியின் தலைவர் Sandrine Rousseau 13% வீதத்தையும் பெற்றுள்ளனர்.

இந்த கணக்கெடுப்பு பிரான்சில் வலதுசாரி கட்சிகளின் கையோங்கி இருப்பதைக் காட்டுகிறது. இதற்கு காரணம் வெளிநாட்டவர்களின் செயல்பாடுகள்தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்