Paristamil Navigation Paristamil advert login

ஜொந்தாம் வீரரை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் காவல்துறை வீரர் கைது!

ஜொந்தாம் வீரரை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் காவல்துறை வீரர் கைது!

29 மார்கழி 2023 வெள்ளி 08:38 | பார்வைகள் : 7549


முன்னாள் காவல்துறை வீரர் ஒருவர் ஜொந்தாம் வீரர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பா-து-கலே மாவட்டத்தின் Blessy எனும் கிராமத்தில் இச்சம்பவம் கிறிமஸ் தின இரவில் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 2 மணி அளவில் குறித்த முன்னாள் காவல்துறை வீரர்., அருகில் வசிக்கும் ஜொந்தாம் வீரர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயமடைந்த குறித்த வீரர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த அதிரடிப்படையினர், குறித்த காவல்துறை வீரரைக் கைது செய்தனர். மது போதையில் இருந்த அவர், வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்தே, துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்