உக்ரைன் மீது ரஷ்யா 158 ஏவுகணைகள் வீச்சு
29 மார்கழி 2023 வெள்ளி 13:59 | பார்வைகள் : 3478
ரஷ்யா, இதுவரை இல்லாத அளவில், உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.
வீடுகள், மருத்துவமனை, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என ஒரு இடம் விடாமல் சரமாரியாக உக்ரைன் மீது ரஷ்யா வான்வெளித்தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.
ரஷ்யா இதுவரை இல்லாத அளவில், 158 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள், உக்ரைன் கிரிமியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. உக்ரைன் தாக்குதலில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.
Feodosia துறைமுகத்தில் ரஷ்யாவுக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்றின்மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ரஷ்ய ஜனாதிபதி புடின், பழிக்குப்பழி வாங்கப்போவதாக சூளுரைத்திருந்தார்.
ரஷ்யா, 122 ஏவுகணைகளையும், 36 ட்ரோன்களையும் கொண்டு தாக்கியதாகவும், உக்ரைன் விமானப்படை 87 ஏவுகணைகளையும், 27 ட்ரோன்களையும் வழிமறித்துத் தாக்கி அழித்ததாகவும் உக்ரைன் ராணுவ தளபதியான Valerii Zaluzhnyi தெரிவித்துள்ளார்.
இந்த ஏவுகணைத் தாக்குதல், இன்று அதிகாலை 5.00 மணிக்கு நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் மகப்பேறு மருத்துவமனை ஒன்றும், ஷாப்பின் மால் ஒன்றும், குடியிருப்புகளும் சேதமடைந்துள்ளன.
பொதுமக்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளார்கள், இரண்டு குழந்தைகள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளார்கள்.
ரஷ்யத் தாக்குதலில் கட்டிடங்கள் தீப்பிளம்பாக பற்றியெரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.