Paristamil Navigation Paristamil advert login

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

30 மார்கழி 2023 சனி 07:05 | பார்வைகள் : 1453


சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையத்தில் கடந்த 12-ம் தேதி 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.

இதனையொட்டி திறப்பு விழாவுக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலந்தூர் முதல் வண்டலூர் வரை உற்சாக வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்