வெளிநாடுகளில் இருந்து வரும் புதிய இஸ்லாமிய இமாம்களுக்கு தடை!
30 மார்கழி 2023 சனி 08:00 | பார்வைகள் : 3412
இஸ்லாமிய மதத்தலைவர்களான இமாம்கள் பிரான்சுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மதமூடாக பிரிவினைவாதத்தை தோற்றுவிப்பதாக தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1, 204 ஆம் ஆண்டில் இருந்து இந்த தடை நடைமுறைக்கு வருகிறது. அல்ஜீரியா, துருக்கி, மொராக்கோ போன்ற நாடுகளில் இருந்து வருகை தரும் இமாம்களுக்கே தடை விதிக்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin, நேற்று டிசம்பர் 29, வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ‘இஸ்லாமிய பிரிவினைவாதம்’ குறித்து தெரிவிக்கையில், புதிய இமாம்களுக்கு தடை விதிப்பது தொடர்பில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.