Paristamil Navigation Paristamil advert login

சிறுவனுக்கு பூட்ஸை பரிசளித்த மிட்செல் ஸ்டார்க்....!

சிறுவனுக்கு பூட்ஸை பரிசளித்த மிட்செல் ஸ்டார்க்....!

30 மார்கழி 2023 சனி 07:48 | பார்வைகள் : 4251


அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது ரசிகனாகிய சிறுவனுக்கு பூட்ஸ் பரிசளித்த வீடியோ பாராட்டுகளை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 360 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து, மெல்போர்ன் டெஸ்டில் 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அவுஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். 

முன்னதாக உணவு இடைவேளையின் முடிவில் அவர் செய்த செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது. 

தன் ரசிகனாகிய சிறுவன் ஒருவனிடம், நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால் தனது பூட்ஸை தருவதாக ஸ்டார்க் உறுதி அளித்திருந்தார்.

பின்னர், அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவர் சிறுவனுக்கு பூட்ஸை கொடுத்து, அவனுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.

இதுதொடர்பான வீடியோவை கிரிக்கெட் அவுஸ்திரேலியா எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிட்செல் ஸ்டார்க், 160 இன்னிங்சில் 342 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

வர்த்தக‌ விளம்பரங்கள்