நிரந்தர வேலைவாய்ப்பை நிராகரித்தால் - கொடுப்பனவுகள் இல்லை! - புதிய சட்டம்!!
30 மார்கழி 2023 சனி 08:05 | பார்வைகள் : 5510
நிரந்தர வேலைவாய்ப்பை நிராகரித்தால், அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது எனும் புதிய சட்டம் இந்த புதிய ஆண்டில் நடைமுறைக்கு வருகிறது.
மாதாந்த கொடுப்பவுகள் பெறும் வேலை தேடும் ஒருவர்,12 மாத இடைவெளியில் முதலாவது நிரந்தர வேலை வாய்ப்பினை மட்டுமே நிராகரிக்க முடியும். அவருடைய தகமைக்கு ஏற்ற ஊதியம், நிலை மற்றும் பணி அமைவிடம் போன்ற காரணிகள் பொருந்தியும், இரண்டாவது தடவை வேலை வாய்ப்பினை நிராகரித்தால் அவருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் இரத்துச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை வெளியான அரச வர்த்தமானியில் (Journal officiel) இத்தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்டம் ஜனவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது.
***
Pôle emploi எனும் பெயர் ஜனவரி 1 ஆம் திகதி முதல் France Travail என மாற்றம் பெறுகிறமை குறிப்பிடத்தக்கது.