Paristamil Navigation Paristamil advert login

போலந்திற்குள் நுழைந்து உக்ரைனை நோக்கி சென்ற ரஷ்ய ஏவுகணை

போலந்திற்குள் நுழைந்து உக்ரைனை நோக்கி சென்ற ரஷ்ய ஏவுகணை

30 மார்கழி 2023 சனி 08:51 | பார்வைகள் : 2382


ரஷ்யாவின் ஏவுகணைகள் போலந்திற்குள் நுழைந்து அங்கிருந்து உக்ரைனை நோக்கி சென்றதாக போலந்தின் இராணுவதளபதி  தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஏவுகணைகள் போலந்தின் வான் பரப்பிற்குள் நுழைந்தன என ஜெனரல் வைஸ்லோ குக்குலா தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவின் ஏவுகணைகள் ராடரில் பதிவாகியுள்ளதை தொடர்ந்து போலந்து ஜனாதிபதி அவசர கூட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மூன்று நிமிடங்கள் ரஸ்ய ஏவுகணை போலந்தின் வான்பரப்பில் காணப்பட்டுள்ளது.

இதேவேளை ஏவுகணை தென்பட்ட பகுதியில் அது விழுந்து வெடித்ததா என்பது குறித்த சோதனைகள் இடம்பெறுகின்றன.

உக்ரைனின் பல நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா மேற்கொண்ட பாரிய வான்தாக்குதல்களின் போதே ரஷ்ய ஏவுகணை போலந்து ஊடாக உக்ரைன் சென்றுள்ளது.

ரஷ்யா உக்ரைன்மீது மிகப்பெரியவான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

உக்ரைனிற்கு எதிரான  போர் ஆரம்பமானபின்னர்ரஸ்யா மேற்கொண்டுள்ள மிகப்பெரிய வான்தாக்குதல் இது என உக்ரைனின்இராணுவ வட்டாரங்கள்சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன.

உக்ரைன் மீது முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு ரஷ்யா மேற்கொண்டுள்ள ஆளில்லா விமான மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் 12 பேர் பலியாகியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு முதல் தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் உக்ரைன் தலைநகரும்  ஏனைய முக்கிய நகரங்களும் தாக்குதலிற்குள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட காலத்தின் பின்னர் எங்கள் கண்காணிப்புகளில் அனைத்து பிரதேசங்களிலும் அனைத்து பகுதிகளிலும் ரஷ்யாவின் தாக்குதலை காண்கின்றோம் என உக்ரைனின் இராணுவ அதிகாரிதெரிவித்துள்ளார்.

உக்ரைனின் தலைநகரையும் கிழக்கு மேற்கு தெற்கு பகுதிகளை இலக்கு வைப்பதற்காக ரஷ்யா 158 ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் பயன்படுத்தியுள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

எதிரி மிகவும் வலுவாக தாக்கியுள்ளான் சிலவற்றை வீழ்த்தியுள்ளோம் உயிரிழப்புகளும்  ஏற்பட்டுள்ளன என  உக்ரைன் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்தலைநகரில் புகையிரதநிலையமொன்றை ரஷ்யா இலக்குவைத்ததில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்