தள்ளிப்போகிறதா 'தளபதி 68' ஃபர்ஸ்ட் லுக்?

30 மார்கழி 2023 சனி 09:38 | பார்வைகள் : 5166
தளபதி விஜய் நடித்த ’தளபதி 68’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் தற்போது விஜயகாந்த் மறைவால் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவது தள்ளி போகலாம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு காலமான நிலையில் அவருக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பதும் இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் விஜயகாந்த் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள தளபதி விஜய், அவரது மறைவால் ரசிகர்கள் துயரத்தில் இருக்கும்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு கொண்டாட்டம் வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதாகவும் இதனை அடுத்து புத்தாண்டில் ’தளபதி 68’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அனேகமாக பொங்கல் தினத்தில் இந்த போஸ்டர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் ஒரு வருடம் 19 வயது கெட்டப்பில் இருக்கும் வேடம் என்றும் இதற்காக புதிய டெக்னாலஜியை இயக்குனர் வெங்கட் பிரபு பயன்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1