Paristamil Navigation Paristamil advert login

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

30 மார்கழி 2023 சனி 13:38 | பார்வைகள் : 3177


இந்தோனேசியாவில் 30.12.2023 இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் அச்சே என்ற பகுதியில் கடலுக்கடியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவு கோளில் 5.9 புள்ளியில் பதிவான இந்த நிலநடுக்கம், சினாபாங் கடற்கரை நகரில் இருந்து 362 கி.மீ தூரத்தில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதையும் இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் அறிவிக்கவில்லை.

கிட்டத்தட்ட 27 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தோனேசியா பசிபிக் கடலின் படுக்கையில் ‘ரிங்க் ஆஃப் ஃபையர்’ என்ற இடத்தில் அமைந்து இருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமிகள் ஏற்படுவது வழக்கம்.

அதிர்ஷ்டவசமாக 5.9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில் உயிரிழப்புகளோ, பெரிய பாதிப்புகளோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்