Paristamil Navigation Paristamil advert login

 தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளார் விலகல்

 தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளார் விலகல்

30 மார்கழி 2023 சனி 14:20 | பார்வைகள் : 6692


இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1 -0 என முன்னிலையில் உள்ளது. 

2-வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியின்போது தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி இடுப்பு பகுதியில் காயம் அடைந்தார். 

 காயத்தை பொருட்படுத்தாமல் அவர் பந்து வீசினார். இதனால் காயம் தீவிரமானது. இதன்காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் அவரை அணியில் இருந்து விடுவித்துள்ளார்.

எனினும் அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது

வர்த்தக‌ விளம்பரங்கள்