Paristamil Navigation Paristamil advert login

நாளை சில மெற்றோ நிலையங்கள் மூடப்படுகின்றன!

நாளை சில மெற்றோ நிலையங்கள் மூடப்படுகின்றன!

30 மார்கழி 2023 சனி 17:06 | பார்வைகள் : 5143


புதுவருட இரவில், அனைத்து மெற்றோ சேவைகளும் இரவு முழுவதும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை, சில மெற்றோ மற்றும் RER நிலையங்கள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசில் Champs-Elysées மற்றும் Arc de Triomphe பகுதிகளைச் சுற்றி பல போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதுவருட நிகழ்வுகள் மற்றும் வாணவேடிக்கைகளை பார்வையிட கிட்டத்தட்ட பதினைந்து இலட்சம் பேர் வருகை தருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக சில தொடருந்து நிலையங்கள் மூடப்படுகின்றன.

நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் Charles de Gaulle-Etoile நிலையமும், மாலை 4 மணி முதல் Champs-Élysées Clemenceau, Franklin D. Roosevelt, Georges V, CDG
Etoile ஆகிய நிலையங்களும்,

Tuileries (L1), Passy (L6), Iéna L9), Boissière (L6) ம்ற்றும் La Motte-Picquet (L 6, L8, L10) ஆகிய நிலையங்களும் மூடப்படுகின்றன.

அதேவேளை, ஒவ்வொரு ஆண்டைப் போலவும், புதுவருட இரவில் போக்குவரத்து சேவைகள் இலவசமாக்கப்பட்டுள்ளன. இல் து பிரான்சுக்குள் நாளை மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை அனைத்து தொடருந்து மற்றும் மெற்றோ சேவைகளும் இலவசமாக்கப்பட்டுள்ளன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்