Paristamil Navigation Paristamil advert login

ஐந்து வயது மகனை நரபலி கொடுக்க திட்டமிட்ட பிரெஞ்சுத்தம்பதிகள் கைது!

ஐந்து வயது மகனை நரபலி கொடுக்க திட்டமிட்ட பிரெஞ்சுத்தம்பதிகள் கைது!

30 மார்கழி 2023 சனி 17:15 | பார்வைகள் : 8587


ஐந்து வயது மகனை நரபலி கொடுக்க தயாரான தம்பதியினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரெஞ்சு தம்பதியினர் இருவர், சில நாட்களுக்கு முன்னர் (டிசம்பர் 21 ஆம் திகதி) ஸ்பெயினில் வைத்து அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் அங்கிருந்து மொராக்கோ நாட்டுக்கு பயணமாக தயாராக இருந்த வேளையில், அவர்கள் மீது சந்தேகம் கொண்ட காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து விசாரணைகளுக்கு உட்படுத்தினர்.

மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் அவர்கள், தங்களது ஐந்து வயது மகனை மொராக்கோவில் நரபலி கொடுப்பதற்கு முன்வந்துள்ளனர்.

மகன் மீட்கப்பட்டு சிறுவர்கள் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறித்த தம்பதியினர் பிரெஞ்சுக்காரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்