Paristamil Navigation Paristamil advert login

Eurostar : இன்று தடையின்றி பயணிக்கும்!

Eurostar : இன்று தடையின்றி பயணிக்கும்!

30 மார்கழி 2023 சனி 22:40 | பார்வைகள் : 3388


நேற்று சனிக்கிழமை நண்பகல் முதல் சேவைத்தடைக்கு உள்ளான Eurostar தொடருந்துகள், இன்று ஞாயிற்றுக்கிழமை தடை இன்றி பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் தேம்ஸ் சுரங்கத்தில் (Thames tunnels) நுழைந்த வெள்ளத்தினால் நேற்றைய தினம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. புதுவருட விடுமுறையின் போது ஏராளமான பயணிகள் தொடர்ச்சியாக பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்த தடை பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

41 தொடருந்துகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தன. London, Paris, Brussels மற்றும் Amsterdam ஆகிய நகரங்களில் 30,000 பயணிகள் இந்த சேவைத்தடைக்குள் சிக்கிக்கொண்டனர்.

இந்நிலையில், தேம்ஸ் சுரங்க வெள்ளம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இன்று காலை முதல் சேவைகள் வழமை போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த தேம்ஸ் சுரங்கத்துக்குள் வேகக்கட்டுப்பாடு நிலவும் எனவும், சில தாமதங்கள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்