உலகிலேயே முதல் முதலாக புத்தாண்டை கொண்டாடும் நாடு
31 மார்கழி 2023 ஞாயிறு 06:06 | பார்வைகள் : 3059
2023ம் ஆண்டின் இறுதி நாளில் நகர்ந்துக்கொண்டிருக்கின்றோம்.
பொதுவாக, பூமிப்பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, இன்னொரு முனையில் இரவாக இருக்கும்.
அதை வைத்து பார்த்தால் சில இடங்களில் புத்தாண்டு பிறந்து பல நேரம் கழித்து தான் வேறு இடங்களில் புத்தாண்டு பிறக்கும்.
புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு அந்த வகையில் பசுபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா, கிரிபாட்டி நாடுகள்தான் முதன்முதலாக 2024ம் புத்தாண்டு பிறப்பை கொண்டாடுகிறது.
அதாவது இலங்கை நேரப்படி டிசம்பர் 31-ம் திகதி 2023ம் ஆண்டு பிற்பகல் 3.30 மணி என்பது இந்நாட்டவர்களுக்கு சரியாக அதிகாலை 12 மணி ஆகிவிடும்.புத்தாண்டையும் வரவேற்க தயாராகிவிடுவார்கள்.
உலகிலேயே முதல் முதலாக புத்தாண்டு இவர்களுக்கு பிறப்பதால், எப்போதுமே சற்று ஆடம்பரமாகவே கொண்டாடுவார்கள்.
லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களை கட்டும்.
இதேபோல் இந்திய நேரப்படி டிசம்பர் 31-ம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு நியூசிலாந்திலும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகும்.
ஜனவரி 1 ஆம் திகதி மாலை 5.50 மணிக்கு பேக்கர் தீவு புத்தாண்டை கொண்டாடுகிறது.
இது தான் புத்தாண்டு பிறக்கும் கடைசி தீவு நாடாகும். ஆக, ஒருநாள் முன்னதாக மாலை நேரத்தில் துவங்கும் புத்தாண்டானது, மறுநாள் மாலை வரை ஒவ்வொரு உலக நாடுகளும் கொண்டாடி மகிழ்கிறது.