Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலிய கிரிக்கெட்  அணியின் இனி இவர் தான் தொடக்க வீரர்

அவுஸ்திரேலிய கிரிக்கெட்  அணியின் இனி இவர் தான் தொடக்க வீரர்

31 மார்கழி 2023 ஞாயிறு 09:25 | பார்வைகள் : 1825


அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டெஸ்டில் ஓய்வு அறிவித்த நிலையில், அவருக்கு பதிலாக கேமரூன் கிரீனை தொடக்க வீரராக களமிறக்க ஆலோசிப்பதாக அவுஸ்திரேலிய பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் 3ஆம் திகதி நடக்கிறது. 

இது தான் டேவிட் வார்னர் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டியாகும். 

அதன் பின்னர் அவரது இடத்தில் (தொடக்க வீரர்) யாரை இனி களமிறக்குவது என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளரான ஆன்ட்ரு மெக்டொனால்டு (Andrew McDonald) தொடக்க வீரராக கேமரூன் கிரீனை களமிறக்க ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார்.  

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'வார்னர் ஒன்றும் தேர்வாளர் கிடையாது, முன்பு அவர் தொடக்க வரிசைக்கு மேட் ரென்ஷாவை கூறியது நினைவிருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர் வரிசைக்கு எல்லாவிதமான வாய்ப்புகளையும் பரிசீலிப்போம்.

தற்போது அவுஸ்திரேலியாவின் சிறந்த 6 பேட்டர்கள் என்ற விவாதத்தில் கேமரூன் கிரீனும் இருக்கிறார். எனவே அவரை தொடக்க வீரர் வரிசைக்கு பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கிறோம். 

மார்கஸ் ஹாரிஸ், மேட் ரென்ஷா, கேமரூன் பான்கிராப்ட் ஆகியோரும் வாய்ப்பில் உள்ளனர். இதில் யாருக்கு இடம் என்பது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் அவுஸ்திரேலிய அணியை அறிவிக்கும்போது தெரியும்' என தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்