காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்...! 200 பேர் பலி
31 மார்கழி 2023 ஞாயிறு 10:39 | பார்வைகள் : 3268
இஸ்ரேல் இராணுவம் காசா மீது தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
கடந்த 24 மணித்தியாலத்தில் 200 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகர் மீது கடுமையான குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் காசாவுக்குள் நுழைந்து ஹமாஸ் சுரங்கப்பாதை வளாகத்தை அழித்துள்ளது.
பல உடல்கள் சுற்றுப்புறங்களின் இடிபாடுகளில் புதைந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுவதோடு மத்திய காசாவில் உள்ள நுசிராட் முகாம் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக மருத்துவர்கள் மற்றும் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் வீடு ஒன்றின் அடித்தளத்தில் உள்ள சுரங்கப்பாதை வளாகத்தை அழித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளதோடு, அல்-குத்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்த பாலஸ்தீன ஊடகவியலாளர் ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து கொல்லப்பட்டாதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடங்கிய ஹமாஸ் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வராத நிலையில் இதுவரை இஸ்ரேலியர்கள் 1,200 பேர் உயிரிழந்துள்ளதோடு, இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காசாவில் 21,507 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.