Paristamil Navigation Paristamil advert login

கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் காலமானார்

கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் காலமானார்

31 மார்கழி 2023 ஞாயிறு 10:53 | பார்வைகள் : 4321


கனா காணும் காலங்கள். சீரியல் என்றாலே செண்டிமெண்ட், அழுகை காட்சிகள் என்றிருந்த டிரெண்டை உடைத்த சீரியல் என்றால் அது கனா காணும் காலங்கள் தான். இந்த சீரியல் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. பள்ளி மாணவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் சீரியல் என்கிற பெருமையும் கனா காணும் காலங்கள் தொடருக்கு உண்டு.

முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனும் அண்மையில் எடுக்கப்பட்டு நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு அதுவும் வெற்றியடைந்தது. இதேபோல் கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்தும் கனா காணும் காலங்கள் தொடரின் 2 சீசன்கள் ஒளிபரப்பாகி அதற்கும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இதனால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மனதில் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு என சொல்லலாம்.

இந்த அளவுக்கு பேமஸ் ஆன இத்தொடரின் நடித்த நடிகர்கள் அடுத்தடுத்து பிரபலமாகி தற்போது ஹீரோவாக நடித்து வருகின்றனர். குறிப்பாக தற்போது கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களான கவின், ரியோ ஆகியோர் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் அறிமுகமானவர்கள் தான். இந்த நிலையில், கனா காணும் காலங்கள் முதல் சீசனில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான அன்பு என்கிற அன்பழகன் திடீரென மரணமடைந்துள்ளார்.

இவர் கனா காணும் காலங்கள் முதல் சீசனில் PT வாத்தியாராக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தாயுமானவன், சரவணன் மீனாட்சி, ரெட்டை வால் குருவி போன்ற தொடர்களில் நடித்த அன்பு, தற்போது ஒளிபரப்பாகி வரும் அண்ணா மற்றும் சீதா ராமன் சீரியல்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில், அவரின் திடீர் மரணம் சின்னத்திரை வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்தின் மரணத்தில் இருந்தே மீள முடியாமல் உள்ள ரசிகர்களுக்கு இது மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்