இலங்கையில் 14 நாட்களில் 20 ஆயிரம் பேர் கைது
31 மார்கழி 2023 ஞாயிறு 15:17 | பார்வைகள் : 2001
யுக்திய சுற்றிவளைப்பு' நடவடிக்கையின் கீழ் கடந்த 14 நாட்களில் 20 ஆயிரத்து 797 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 11 நாட்கள் சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 85 கோடி ரூபா என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 11.6 கிலோ கிராம் ஹெராயின், 8.3 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 72,272 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 11 நாட்களில் 85 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 55 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொதுமக்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு திணைக்களங்களுக்கு 10,798 தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இன்று (31) தெரிவித்துள்ளது.