Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் எரிவாயுக்களின் விலைகளில் மாற்றம் - புதிய விலை அறிவிப்பு

இலங்கையில் எரிவாயுக்களின் விலைகளில் மாற்றம் - புதிய விலை அறிவிப்பு

1 தை 2024 திங்கள் 08:18 | பார்வைகள் : 13616


எரிவாயுக்களின் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், புதிய விலைகள் வருமாறு:

12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை4,250 ரூபாவாக காணப்படுகின்றது.

05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,707ரூபாவாக காணப்படுகின்றது.

2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 795 ரூபாவாக காணப்படுகின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்