சிவப்பு கடலில் ஹவுதி-அமெரிக்க படைகள் மோதல் - 10 பேர் பலி
1 தை 2024 திங்கள் 08:37 | பார்வைகள் : 3336
சிவப்பு கடல் பகுதியில் தாக்குதல் நடத்திய ஹவுதி படையினரின் படகுகளை அமெரிக்க பாதுகாப்பு படை ஹெலிகாப்டர்கள் அழித்துள்ளனர்.
பாலஸ்தீன் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து ஈரானின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை சிவப்பு கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை சிவப்பு கடல் பகுதியில் சிங்கப்பூரின் கொடியேந்தி சென்ற Maersk Hangzhou கண்டெய்னர் சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட அவசர அழைப்பை ஏற்று வந்த USS-ன் ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல் பாதுகாப்பு படைகள், ஹவுதி படையினருடன் சண்டையிட்டு அவர்களை விரட்டியடித்துள்ளனர்.
ஹவுதி படையினருடன் நடந்த சண்டையின் போது ஹவுதி படையினரின் 3 படகுகள் மூழ்கடிக்கப்பட்டனர்.
அத்துடன் இதில் 10 பேர் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை Maersk மற்றும் USS படைகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு பிறகு சிவப்பு கடல் வழியாக பயணிப்பதை 48 மணித்தியாலம் நிறுத்தியதாக Maersk தெரிவித்துள்ளது.