Paristamil Navigation Paristamil advert login

விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் புதிய விண்கலம்

விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் புதிய விண்கலம்

1 தை 2024 திங்கள் 09:45 | பார்வைகள் : 1707


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புத்தாண்டு அன்று XPoSat என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது.

இந்த விண்கலம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 10 மணிக்கு ஏவப்பட்டது.

இந்திய விண்வெளித் துறையின் சந்திரயான் -3 மற்றும் ஆதித்யா எல் 1 பயணத்திற்குப் பிறகு, இது நாட்டின் விண்வெளி ஆய்வுக்கான அடுத்த திட்டமாகும்.

இந்த விண்கலமானது விண்மீன் மண்டலத்தில் உள்ள கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா அனுப்பும் உலகின் இரண்டாவது விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்