Crit'Air தொடர்பில் போலியான மின்னஞ்சல்கள்! - பண மோசடி!
1 தை 2024 திங்கள் 12:44 | பார்வைகள் : 3674
வாகனங்களில் ஒட்டப்படும் Crit'Air ஒட்டிகள் தொடர்பில் சில போலி மின்னஞ்சல்கள் பொதுமக்களிடையே பரவி, பண மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Crit'Air ஒட்டிகளானது வாகனங்கள் வெளியிடும் மாசடைவின் அளவை குறிப்பதாகும். 0 இல் இருந்து 5 ஆம் விலக்கம் வரை இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 4 ஆம் இலக்க Crit'Air ஒட்டிகள் கொண்ட வாகனங்கள் இன்று ஜனவரி 1 ஆம் திகதி முதல் பிரான்சின் ஐந்து பெரு நகரங்களில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Montpellier, Lyon, Nice, Grenoble மற்றும் Strasbourg ஆகிய நகரங்களே அவையாகும்.
இந்நிலையில், இந்த புதிய சட்டத்தை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தும் மோசடிக்காரர்கள், இதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையிடுகின்றனர்.
ஜனவரி 12 ஆம் திகதிக்குள்ளாக பணம் செலுத்துவனூடாக உங்களது வாகனங்களுக்கு (4 ஆம் இலக்க Crit'Air ஒட்டிகள் கொண்ட) விதிக்கப்படும் தடையை விலக்க முடியும் என தெரிவிக்கும் குறித்த மின்னஞ்சல், பணம் செலுத்தக்கூடிய ஒரு இணையத்தள முகவரியையும் உங்களுக்கு வழங்குகிறது.
பொதுமக்கள் அதில் பணம் செலுத்தி உங்களது வாகனங்களை தொடர்ந்து செலுத்த முடியும் என நம்பி, பணத்தை அந்த இணையத்தளம் ஊடாக செலுத்துகிறார்கள்.
ஆனால் அதில் உண்மை எதுவும் இல்லை. மேற்குறித்த நகரங்களில் குறித்த 4 ஆம் இலக்க Crit'Air ஒட்டிகள் கொண்ட வாகனத்தை செலுத்துவதற்கு எந்த வித வாய்ப்புகளும் இல்லை. எனவே இது குறித்த விழிப்புணர்வுடன் மக்கள் வசிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடிக்காரர்களிடம் பணத்தை இழக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.