கமல் - மணிரத்னம் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? எங்கே?

1 தை 2024 திங்கள் 13:54 | பார்வைகள் : 5467
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தக்லைஃப்’ திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும் அதனை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது. கமல் - மணிரத்னம் இணையும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான செட் அமைக்கும் பணி முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
பிக் பாஸ் இறுதிப் போட்டி முடிந்தவுடன் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பிற்கு கமல்ஹாசன் தயாராகி விடுவார் என்றும் அதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கமல் ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவும், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்ய உள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளது. ‘நாயகன்’ கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1