Paristamil Navigation Paristamil advert login

உடைந்த தொலைபேசி திரைகளை மாற்றிக்கொள்ள கொடுப்பனவு!

உடைந்த தொலைபேசி திரைகளை மாற்றிக்கொள்ள கொடுப்பனவு!

1 தை 2024 திங்கள் 14:22 | பார்வைகள் : 7521


பழுதடைந்த வீட்டு உபயோகப்பொருட்களை திருத்திக்கொள்ள அரசு கொடுப்பனவு வழங்குவது போல், இன்று முதல் தொலைபேசிகளை திருத்திக்கொள்ளவும் கொடுப்பனவுகள் வழங்க உள்ளது.



15 யூரோக்களில் இருந்து 25 யூரோக்கள் வரை தொலைபேசிகளுக்கும், 55 யூரோக்கள் வரை மடிகணணிகளுக்கும், 60 யூரோக்கள் தொலைக்காட்சிகளுக்கும் இந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளது. இன்று ஜனவரி 1 அம் திகதி முதல் இந்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியும். தொலைபேசிகளின் திரைகளை, மின்கலன்களை மற்றும் ஒலிவாங்கி, ஒலிபெருங்கி, கமரா லென்ஸ் போன்றவற்றையும் மாற்றிக்கொள்ள முடியும்.

புதிய தொலைபேசிகளை வாங்குவதைக் குறைக்கும் முகமாக இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது. புதிய இலத்திரணியல் பொருட்கள் தயாரிக்கப்படுவதால் புவியில் ஏராளமான இலத்திரனியல் கழிவுகள் சேருவதாகவும் சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதையடுத்தே இந்த கொடுப்பனவுகளை அரசு வழங்க தீர்மானித்துள்ளது.


புதிய மாதம் - புதிய மாற்றங்கள்!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்