Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் இணையும் ‘மாமன்னன்’ கூட்டணி...

மீண்டும் இணையும் ‘மாமன்னன்’ கூட்டணி...

1 தை 2024 திங்கள் 15:15 | பார்வைகள் : 4250


தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் ‘மாமன்னன்’ டீம் மீண்டும் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் விஜய், சூர்யா, சரத்குமார், பிரசாந்த், பிரபுதேவா, உட்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98 வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ’மாமன்னன்’ படத்தில் முக்கிய டைரக்டர்களின் நடித்த பகத் பாசில் மற்றும் வடிவேலு நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க மற்ற நடிகர் நடிகைகளின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’மாமன்னன்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த வடிவேலு மற்றும் பகத் பாசில் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்