புத்தாண்டு இரவில் - 745 வாகனங்கள் தீக்கிரை!
1 தை 2024 திங்கள் 16:01 | பார்வைகள் : 3953
டிசம்பர் 31 - ஜனவரி 1 ஆம் திகதிக்குட்பட்ட இரவில் பிரான்சில் 745 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல நகரங்களில் இரவு நேர வன்முறை இடம்பெற்றிருந்தது. மொத்தமாக 745 வாகனங்கள் எரியூட்டப்பட்டதுடன், 380 பேர் கைதும் செய்யப்பட்டிருந்தனர்.. சென்ற ஆண்டு புதுவருட இரவு இடம்பெற்ற வன்முறையோடு ஒப்பிடுகையில் 10% சதவீதத்தால் குறைவாகும்.
புதுவருட இரவின் போது பாதுகாப்புக்காக தலைநகர் பரிசில் 6,000 காவல்துறையினரும், நாடு முழுவதும் 90,0000 காவல்துறையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
உள்துறை அமைச்சர் Gérald Darmanin இன்று திங்கட்கிழமை காலை Montargis (Loiret) நகர காவல்நிலையத்துக்கு பயணித்திருந்தார். அங்கு கடமையில் ஈடுபட்ட காவல்துறையினரைச் சந்தித்து உரையாடியிருந்தார்.