இலங்கையில் எரிபொருள் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது
1 தை 2024 திங்கள் 17:07 | பார்வைகள் : 1988
இலங்கையில் பிரதான எரிபொருள் விற்பனை நிலையங்கள் எரிபொருள் விலைகளை இன்று முதல் அதிகரித்துள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாதென போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம இது தொடர்பில் கூறுகையில், ”எரிபொருள் விலைகள் இன்று காலைமுதல் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கப்பட்டுள்ளன. என்றாலும், அதற்கு ஏற்றவாறு பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது.” என்றார்.
இதேவேளை, எரிபொருளின் விலைகள் இன்று காலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 366 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.
ஒடோ டீசல் ஒரு லீற்றர் 29 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 358 ருபாவுக்கு விற்பனை செய்வதுடன், சுப்பர் டீசல் 41 ரூபா அதிகரிக்கப்பட்டு 475 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.