Paristamil Navigation Paristamil advert login

கனடாவின் வழமைக்கு முரணான   கால நிலை..

கனடாவின் வழமைக்கு முரணான   கால நிலை..

2 தை 2024 செவ்வாய் 05:41 | பார்வைகள் : 4839


கனடாவின் சில பகுதிகளில் வழமைக்கு மாறான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்வியாவில் வெப்பநிலை அதிகரித்துளள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணத்தில் நாள் தோறும் வெப்பநிலை அளவுகள் சாதனை படைத்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை வான்கூவாரில் 13.2 பாகை செல்சியசாக காணப்பட்டுள்ளது.

 இதற்கு முன்னர் 1997 ஆம் ஆண்டில் இவ்வாறு கூடுதல் வெப்பநிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குளிர்காலத்தில் கூடுதல் அளவில் மழை பெய்யும் சாத்தியமும் காணப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

வழமையான பருவ காலத்திற்கு முரண்பட்ட வகையில் வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித செயற்பாடுகளினால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டிவல் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்